குடிசன மதிப்பீடு செய்யும் பணி தொடராக தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இடம் பெற்று வருகின்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க மீரா நகர் கிராம சேவகர் பிரிவிலும்
இன்று (08) குடிசன மதிப்பீடு பணி தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் இக் குடிசன மதிப்பீடு வேலைத் திட்டம் திறம்பட இடம் பெற்று வருகின்றது.
இதில் குடிசன மதிப்பீட்டு குழுவின் மேற்பார்வையாளரும் சமூக சேவை உத்தியோகத்தருமான ப.சுதன் மற்றும் மீரா நகர் கிராம சேவகர் நௌசாட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.