சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவில் அமைப்பினரினால் குச்சவெளி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (06) புதன்கிழமை காலை மனித உரிமைகள் தின வாரத்தை முன்னிட்டு மனித உரிமைசார்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. குறித்த நிகழ்வில் சிவில் செயற்பாட்டாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் AHRC நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.