கிளிநொச்சி தொடருந்து கடவையில் 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில். 4 சிறிலங்கா இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி – காளிகோயில் 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே கடவையில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (25ஆம் திகதி) பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

acc கிளிநொச்சி தொடருந்து கடவையில் 6 சிறிலங்கா படையினர் பலி

.