கிளிநொச்சியில் முதலாவது கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டார்

501 Views

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொவிட் -19 நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தருமபுரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை நேற்று இரவு கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் யாழ். ஹோட்டலில் பணியாற்றும் பணியாளருக்கே கொரோனா தோற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உணவக உரிமையாளருக்கு கொரோனா தோற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றி ஊழியருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை யிலேயே கோவிட் -19 தொற்று நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி திரும்பிய அவர், சுய தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரியின் சாதூரியமான செயற்பாட்டால் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது உறவினர் ஒருவர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நிலையில் அவர் கடந்த மூன்று தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply