கிளிநொச்சியில் பாலம் ஒன்றிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

404 Views

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறுக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, நெத்தலியாற்றுப் பாலத்திற்கு முன்பாக தற்போது இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

பரந்தன், ஏ-35 விதியின் வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் தர்மபுரம் நெத்தலியாற்றுப் பாலத்தினை அகலம் ஆக்குமாறும், சேதமடைந்த வீதிகளை புனரமைத்து தருமாறும் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதில் பிரதேச சபை உறுப்பினர்கள், பங்குதந்தை மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply