கிளிநொச்சியில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்

கிளிநொச்சியில் பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரைச்சிப் பிரதேச சபையினால் 10 வீதமாக அதிகரிக்கப்பட்ட ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆதனவரியை 04 வீதமாக குறைக்கக் கோரியும் கிளிநொச்சி நகரின் பிரபல வர்த்தக நிலையமான தமிழ்க்கங்கை ஹட்வெயார் உரிமையாளர் குமாரசாமி மகேந்திரன் 2020.01.23 ஆம் திகதி காலை 9.00 மணியளவில், சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளார் என அறிவித்துள்ளார்..

இப்போராட்டத்தில் வர்த்தக சமூகம்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.