கிண்ணியாவில் காணி உரித்தாவனத்திற்கான அனுமதி கடிதங்கள் வழங்கி வைப்பு

கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட   மக்களுக்கு தங்கள் குடியிருந்த காணிக்கான உரித்தாவணங்கள் வழங்குவதற்காக அதற்கான அனுமதி கடிதங்கள் இன்று (10)பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் செக் நாட்டின் இலங்கைக்கான தூதுவர். மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.சுதாகரன், மாகாண காணி ஆணையாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று காணி உரித்தாவணம் இல்லாமையாகும்.
இந் நிகழ்வில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு காணி அளிப்பு காணி அனுமதிப்பத்திர அனுமதி கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.