வட இந்தியர்களின் தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்திக்கும் சிறீலங்காவின் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் பாரம்பரிய உறவுகள் உள்ளதாக சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரனஜ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
காந்தியின் 150 ஆவது பிறந்ததினம் சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில் நேற்று (01) கொண்டாடப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் கலந்துகொண்ட இந்தியத்தூதுவர் காந்தியின் படத்திற்கு வணக்கம் செலுத்தியதுடன், 1927 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு பல தடவைகள் பயணம் மேற்கொண்ட காந்தி சிறீலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் இறுக்கமான பிணைப்புக்களைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.