காணி ஆவணங்களை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வழங்க வேண்டும் -அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே 

371 Views

அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே  தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கோப்புகள் அநுராதபுரத்திலுள்ள அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், வடக்கு மாகாண மக்களுக்கு உரித்தான காணிகள் அந்த மாகாண மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும், வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காணி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்தார்.  அத்துடன் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் துறைசார் தரப்பினர் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவர் கூறியுள்ளார்.

Leave a Reply