காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா இணைப்பாளரிடம் கோட்டா வெளியிட்ட தகவல்!

ஈழத்தில் நடைபெற்ற போரின் போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் காணாமல் போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப்புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply