காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காகப் போராடிய மற்றொரு தாயும் மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு நடந்ததை அறியாமல் மற்றுமொரு தாயின் உயிரும் பிரிந்துள்ளது.

கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த, இறுதி யுத்தத்தில் பிள்ளையைத் தொலைத்த தாயான சின்னையா கண்ணம்மா (வயது-77) கடந்த 19ஆம் திகதி காலமானார்.

தனது கடைசி மகன் சின்னையா பிரசாந்த் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளாக அவரை, இந்தத் தாய் தேடிவந்துள்ளார். இறுதியில் அவரைக் காணாமலே உயிர்விட்டுள்ளார். 

காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளக்காகப் போராடிய சுமார் 40 பெற்றொர்கள் இதவரையில் மரணமடைந்திருக்கின்றார்கள். 

0124 காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காகப் போராடிய மற்றொரு தாயும் மரணம்