கனமழையால் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று இரவு (14) பெய்த கனமழை காரணமாக தம்பலகாமம்,கிண்ணியா போன்ற பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தற்போது வயல் விதைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் பலத்த மழை காரணமாக முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கிண்ணியா சூரங்கல் கற்குழி உள்ளிட்ட வயல் நிலப்பகுதிகள் மற்றும் தம்பலகாமம் கோயிலடி உள்ளிட்ட பல வயல் நிலங்கள் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வயலை உழுது விதைப்பினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.