கனடாவில் ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’ இற்குத் தெரிவான ஈழத் தமிழ் யுவதி

299 Views

ஈழத்தைச் சேர்ந்த டக்சினி என்ற யுவதி கனடாவில்  ‘பிரபஞ்ச தமிழ் அழகி 2019’ ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரொறன்ரோ நகரில் கடந்த மாதம் 27ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிதம்பரப்பிள்ளை டக்சினி பிறந்து வளர்ந்தது திருகோணமலையில் ஆகும். அவர் திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இவர் HSBC  வங்கியில் பணிபுரிகின்றார். மும்மொழியிலும் தேர்ச்சி பெற்றவராவார்.

திருகோணமலை மூதூர் பழம்பெரும்பதி பள்ளிக்குடியிருப்பின் பிரபல குடும்பப் பின்னணியான தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை, மற்றும் தவமணிதேவி ஆகியோரின் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply