கனடாவில் இடம்பெறும் நடைப்பயணத்திற்கு ஆதரவு அதிகரிப்பு

கனடாவில் இடம்பெற்றுவரும் காணாமல்போனவர்களுக்கான நீதி கோரும் நடைப்பயணத்திற்கு  ஆதரவாக பலர் குரல்கொடுத்துவருவது போராட்டக்காரர்களுக்கு உற்சாகத்தை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

424 கி.மீ தூரத்தை கடந்து ஒட்டாவா நகரத்தை அடையும் இந்த நடைப்பயணத்தின் இறுதியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்களிடம் மனு ஒன்றும் நாளை (14) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கனடா கொன்சவேட்டிவ் கட்சியின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் நிழல் அமைச்சர் காநெட் ஜீனியஸ் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கலாநிதி போல் நியூமன் அவர்கள் தனது வாழ்த்து செய்தியுடன் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் பங்குபற்ற வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

தாயகத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜனா அவர்கள் உட்பட பலரும் தமது வாழ்த்து செய்திகளை அனுப்பியிருந்தனர்.

Leave a Reply