இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால பிரச்சனை தற்போது உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடுகோரி அங்குள்ள சீக்கியர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் 1980களில் ஆயுதமோதலாக உச்சமடைந்தபோது அதனை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இராணுவத்தை கொண்டு அடக்கியிருந்தார்.
1984 ஆம் ஆண்டு பொற்கோயில் மீது மேற்கொள்ளப்பட்ட நீலநச்சத்திர படை நடவடிக்கையின் போது போராட்டக்குழுவின் தலைவர் பிந்திரன்வாலே உட்பட 400 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்கு பழிதீர்ப்பதற்காக 1984 ஆம் ஆண்டே இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லபட்டிருந்தார். அதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து பெருமளவான சீக்கிய மக்கள் இந்தியாவில் இருந்து புலம்யெர்ந்து செல்ல ஆரம்பித்தனர். அவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடைக்கலம் கொடுத்தன.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு பின்னர் அதிக சிக்கிய மக்கள் வாழும் நாடாக கனடா உள்ளது அங்கு 770,000 பேர் வாழ்வதுடன், அவர்கள் கனடாவின் சனத்தொகையில் 2 விகிதமாகும். தற்போதைய கனேடிய அரசிலும் அவர்களின் நான்கு அமைச்சர்கள் உள்ளனர்.
ஆனால் அங்கு சென்றவர்கள் தமது தாயகக் கோட்பாட்டை கைவிடவில்லை. கல்வி, பொருளாதாரம் மற்றும் அதிகாரம் ஆகிய துறைகளில் தம்மை வலுப்படுத்திக் கொண்டு தமது தாயக மீட்புப்போரை அங்கிருந்தே மேற்கொண்டு வருகின்றனர்.
இது இந்தியாவுக்கு மிகப்பெரும் சிக்கலை தோற்றுவித்தள்ளது. காலிஸ்த்தான் விடுதலை என்ற இந்த நோக்கதிற்காக பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
அவர்களின் போராட்டம் கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தான் அதிகம். கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் முன்பான பஞ்சாப்பில் இந்திய அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போரட்டங்களை நடத்திவரும் இந்த அமைப்புக்கள் பல சந்தர்ப்பங்களில் இந்திய தூதரகங்கள் இந்து கோவில்கள் போன்றறன மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த அமைப்பில் உள்ளவர்களில் பலரை இந்தியா தடை செய்துள்ளதுடன் அண்மையில் கொல்லப்பட்ட ஹர்கீட் சிங் நிஜாரின் கைதுக்கு உதவுவோருக்கு பணப்பரிசும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் கடந்த ஜுன் மாதம் 18 ஆம் நாள் கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் வைத்து நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தனிநாட்டுக்கான உத்தியோகபூர்வமற்ற வாக்கொடுப்பை அவர் நடத்த முற்பட்ட வேளையில் கொல்லப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சில்வர் நிற ரெயாட்டா காரில் வந்த முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நிஜாரை அருகில் வைத்து பல முறை சுட்டுள்ளனர். இவை அனைத்தும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் வெளியக உளவு அமைப்பன றோவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பவன்குமார் ராஜ் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னரே இந்த கொலை நிகழ்ந்துள்ளது.
அதாவது இஸ்ரேலின் பாணியில் வெளிநாடுகளில் வைத்து தனக்கு வேண்டாதவர்களை படுகொலை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் றோ அமைப்பு தனது அயல்நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேசம், இலங்கையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தாலும் மேற்குலக நாடுகளில் களமிறங்கியிருப்பது இதுவே முதல் தடவை.
ஆனால் அது இந்தியாவை மிகப்பெரும் சிக்கலில் கொண்டுசென்றுவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (18) நாடாளுமன்றத்தில் பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோ இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்குள்ளதாக தெரிவித்துள்ளார். கொலை இடம்பெற் 3 மாதங்களின் பின்னர் அவர் பேசியிருப்பது என்பது ஆதாரங்களை தெளிவாக திரட்டிய பின்னர் அதனை வெளிப்படுத்தியதாகவே கொள்ளப்பட வேண்டும்.
இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கையிலும் இருந்து வெளியேறிய கனடா அண்மையில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டிலும் இந்திய பிரதமரை சந்திப்பதில் கனேடிய பிரதமர் ஆர்வம் காண்பிக்கவில்லை. இரவு விருந்துபசாரத்தை புறக்கணித்த அவர் பின்னர் அவர் வந்த கனேடிய றோயல் வான்படையின் முதலாவது சிறப்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்க நேரிட்டது. அப்போதும் அவர் வெளியில் வரவில்லை.
சிறப்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் தற்போது மிகுந்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்தியா தனது விமானத்தை வழங்க முனவந்தபோதும் ருடோ அதனை மறுத்துவிட்டார். ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன் அவர் நேரிடையாகவே இந்த கொலை தொடர்பில் பேசியதாகவும், ஆனால் அதனை மறுத்த மோடி கனடா இந்தியாவிற்கு எதிராக செயற்படுவதாகவும் கற்றம் சுமத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து கனடாவுக்கு திரும்பிய ருடோ இந்தியை பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது மட்டுமல்லாது இந்திய புலனாய்வுத்துறை தலைவர் பவன்குமாரை நாட்டில் இருந்தும் வெளியேற்றியுள்ளார். அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள னனேடிய இராஜதந்திரி ஒருவரை வெளியேற்றியது இந்தியா.
எனினும் கனடாவின் விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் விடுத்த வேண்டுகோளால் சினமடைந்த இந்தியா கடந்த வியாழக்கிழமை (21) கனேடிய மக்களக்கான நுளைவு அனுமதியை இரத்துச் செய்திருந்தது.
ஆனால் அதன் பின்னர் பேசிய கனேடிய பிரதமர் தான் இந்தியாவை சண்டைக்கு இழுக்கவில்லை விசாரணைகளுக்கு ஒத்துளைக்கவே கோருகிறேன் என்று தெரிவித்துள்ளதுடன், கனேடிய மண்ணில் கனேடிய பிரஜையை அன்னிய நாடு ஒன்று படுகொலை செய்வது என்பது கனடாவின் இறைமைக்கு ஏற்பட்ட பங்கம் என தெரிவித்துள்ளார்.
ருடோ அமைதியாகவே காய்களை நகர்த்துகின்றார். ஆனால் இந்தியாவின் பதற்றம் என்பது இந்தியா மிகப்பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதை உணர்த்துகின்றது.
அதேசமயம் பிரித்தானியாவில் பெர்மிங்கம் பகுதியில் இயங்கிவந்த காலிஸ்த்தான் விடுதலைப் படையினர் தலைவர் தனது 35 ஆவது வயதில் இரத்தப்புற்றுநோய் வந்து ஜுன் 10 ஆம் நாள் திடீரென இறந்ததும் இந்திய உளவு அமைப்பின் வேலைதான் எனவும் அதனை பிரித்தானியா விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தன்னை ஒரு இஸ்ரேலிய மொசாட்டாக நினைக்கும் இந்திய உளவுப்படையின் நடவடிக்கைக்கு கனடாவின் நடவடிக்கை மிகப்பெரும் பின்னடைவாக அமையப்போகின்றது.
அமெரிக்காவின் புலனாய்வுத்துறையுடன் இந்த கொலை தொடர்பில் மிக நெருக்கமாக தாங்கள் செயற்பட்டுவருவதாகவும் கனேடிய பிரதமர் இது தொடர்பில் பிரித்தானியா மற்றும் அமெரிக்க தலைவர்களுடன் பேசியுள்ளதாகவும்இ தற்போது நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் போது தனியாக ஜி-7 தலைவர்களுடன் இந்த விவகாரம் பேசப்படவுள்ளதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட ஐந்து கண்கள் (Five Eyes) என்ற புலனாய்வு அமைப்பும் கனடாவுக்கான தகவல்களை திரட்டியுள்ளது. அவர்களின் தரவுகள் அல்லது கொலைக்கு உதவியவர்களின் தரவுகளின் அடிப்படையில் தான் ருடோ இந்தியாவை குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கெnலை உறுதிப்படுத்தப்பட்டால் சவுதி அரேபியா துருக்கியில் வைத்து அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரை படுகொலை செய்தது போல, ரஸ்யா பிரித்தானியாவில் வைத்துதனது புலனாய்வு அதிகாரியை படுகொலை செய்ததுபோல இந்தியாவும் பார்க்கப்படும் என்பதுடன், இந்தியா உலகில் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து இந்த நாடுகளின் தரத்திற்கு கீழ் இறக்கப்படும். ஆனால் காலிஸ்த்தான் போராட்டம் ஓயப்போவதில்லை இந்தியாவுடன் இணைந்து அதனை அடக்கவேண்டும் என்றால் இந்த நாடுகள் அதனை முளையிலேயே கிள்ளியிருப்பார்கள்.
அவுஸ்திரேலிய பிரதமரும் கருத்தும் அதனை தான் சொல்கின்றது. அதாவது தனிநாடு கோருவது மக்களின் பேச்சுரிமை அதில் நாம் தலையிடமுடியாது என சொல்லியுள்ளார். அதாவது ஸ்கொட்லாந்து தனிநாட்டுக்கான வாக்கொடுப்பை நடத்த பிரித்தானியா அனுமதித்ததே தவிர தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என கூறவில்லை