கட்டுநாயக்கா வந்துள்ள இந்திய விமானம் – 19 இலங்கையர்களும் தூதரக அதிகாரிகளும் வருகை

இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் இவ்வாறு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.