கச்சதீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் வெளியுறவுத்துறை அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன. பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகி றார் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் இந்த மாதம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் கோவை பாராளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று அங்கு தேர்தல் பணிமனை ஒன்றை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைக்கு கச்சதீவு வழங்கப்பட்ட விவகாரத்தில் தி. மு. க. அரசுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று குற்றஞ் சாட்டிய அவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெற்ற ஆவணங்க ளையும் அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.