முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக நோர்வே பொருண்மிய மதியுரையகம் (NORWAY TECH) ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் நிதியுதவியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தொகுதி 1/9/22 அன்று மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது .
பாடசாலை முதல்வர் கணேசலிங்கம் ஜெயதீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துணுக்காய் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான குடிநீர் தொகுதியினை திறந்து வைத்தார்
பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் சமூக மட்ட அமைப்புகளினுடைய பிரதிநிதிகள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
NTL Norsk Tjenestemannslag உதவி மூலம் நிதியினை ஏற்பாடு செய்து தந்த நாதன் (நோர்வே) அவர்களுக்கு தாயக மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.