ஒரேநாளில் கொரோனாவுக்கு 31 பேர் பலி – இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்

கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் 31 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் மரணமடைந்திருப்பது இதுவே முதல் முறை.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமானோரின் தொகை 923 ஆக அதிகரித்துள்ளது.