எமது வேட்பாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவம் அச்சுறுத்தல்; சமத்துவ சோசலிசக் கட்சி முறைப்பாடு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு சிலர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் தமது கட்சியின் மூன்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர் என, சமத்துவ சோசலிசக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சமத்துவ சோசலிச கட்சியின் பொதுத்செயலாளர் விஜே டயஸ் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவருக்குக் கடிதம் அனுப்பி இரண்டு வாரங்களாகியும், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும், சமத்துவ சோசலிச கட்சியின் பொதுச்செயலாளர் விஜே டயஸ் கூறினார்.