எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா நியமனம்

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. அதில் சஜித் பிரேமதாசாவே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, மகிந்த ராஜபக்ஸ பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த நியமனங்கள் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை.

இதற்கான தீர்வு இன்று(05) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கிடைத்துள்ளது. இதற்கமைவாக, ஐ.தே.கட்சியின் தலைமைத்துவப் பொறுப்புக்களில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து நீடிப்பார் என்றும், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா நியமிக்கப்படுவார் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், நாடாளுமன்ற குழுவும் இணைந்தே எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.