எதிர்காலத்தில் தமிழ் அரசு எங்களுடன் இணையும் – சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி எதிர்காலத்தில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இணைந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

நேற்று அவர் தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக நாம் தொடர்ந்தும் கலந்துரையாடுகளையும் – நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இதேசமயம், ஜனாதிபதித் தேர்தலோ, பாராளுமன்றத் தேர்தலோ எது நடந்தாலும் நாங்கள் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராகவே உள்ளோம்” என்றும் அவா் கூறினார்.