ஊடகவியலாளர் கோகிலதாசனிற்கு அழைப்பாணை

404 Views

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு    தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் கல்குடா தொகுதி இளைஞர் அணிதலைவரும், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டவரும், தற்போது ஊடகவியலாளருமான முருகுப்பிள்ளை கோகிலதாசன்  அவர்களுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பாணை ஒன்று வழங்கியுள்ளனர்.

முருகுப்பிள்ளை கோகிலதாசன் அவர்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று இன்றையதினம் 12.11.2019 வாழைச்சேனை கிண்ணையடி பகுதியில் அமைந்திருக்கும் அவருடைய வீட்டிற்கு சென்று பயங்கரவாத தடுப்பு  பிரிவினர் கையளித்து சென்றுள்ளனர் .

குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும்விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும்  விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதால் தமிழீழ விடுதலை இயக்கத்தின் கல்குடா தொகுதி இளைஞர் அணி தலைவர் அவருகளை 20.11.2019காலை 9.30மணிக்கு 1ம் மாடி,புதிய செயலக கட்டடம்,கொழும்பு-1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு 01ன் பொறுப்பதிகாரி அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்  என குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த உள்ளுராட்சி மன்ற தோர்தலில் போட்டியிட்ட காரணத்தினாலும் தாம் அரசியல் கட்சி உறுப்பினராக செயற்படுகின்றமையாலும் குறிப்பாக தற்போது ஊடகவியலாளராக செயற்படுவதாலும் தற்போது தேர்தல் காலம் என்பதால் தம்மை விசாரணைக்குட்படுத்த எண்ணுகின்றனர் என சந்தேகம் தெரிவிக்கின்றார் இளைஞர் அணி தலைவர் முருகுப்பிள்ளை கோகிலதாசன்.

kokulathas ஊடகவியலாளர் கோகிலதாசனிற்கு அழைப்பாணை

Leave a Reply