உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44 ஆவது உறுப்புரையின் கீழ் பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளை சட்டத்தின் 55ஆம் பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய தேசிய கடன் மறுசீரமைப்புக்கான சகல நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், திங்கட்கிழமை (02) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.