உலக மாற்றுவலுவுடையோர் நாள் -தா.குகதாசன்(உயிரிழை பயனாளி மட்டக்களப்பு)

உடல் அல்லது உளம் அல்லது இரண்டிலும் ஏற்படும் பகுதியான குறைபாடுகள் உடையோர் ஆனால் திறன்கள் உள்ளோர் மாற்று வலுவுடயோர் ஆவர் .

•நகரும் வலு / உடல் வலு பாதிப்புடையோர்
•முள்ளந்தண்டு வட பாதிப்புடையோர்
•மூளைப் பாதிப்புடையோர்
•பார்வைப் புல பாதிப்புடையோர்.
•கேட்டல் பாதிப்புடையோர்
•கற்கும் திறன் பாதிப்புடையோர்
•உளவியல் பாதிப்புடையோர்
•வெளித்தெரியாத பாதிப்புடையோர்.

என எட்டு வகைகளாக வகுக்கப்படுகின்றனர்.

இலங்கையில் முதல்முறையாக 1996 ஆம் ஆண்டின் 28 இலக்க , அங்க்வீனமுற்றோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1996 ஒக்டோபர்  மாதம் 24 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 1996ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம்  திகதி  தேசிய இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் வர்த்தமானிப் பத்திரிகையின் உத்தியபூர்வமாக வெளியிடப்பட்டது.

இலங்கை சட்டத்தின் பிரகாரம் 1996ம் ஆண்டு ” 23″ டில் மூன்று உரிமைகள் வழங்கப்பட்டது அதில் கல்வி, சமத்துவம்,தொழில் வாய்ப்பு போன்ற விடையங்களாக கொண்டுவரப்பட்டது..

தற்போது நிகழ் கால நீரோட்டத்தில் பேசுபொருளாக மாற்றுவலுவுடையோர் மாற்றம் பெற்றாலும். மனப்பாங்கினாலும், தேவைகளை அடைவதற்கு வேண்டிய தர அளவுகளை ஊனமுற்ற இலங்கைப் பெரும்பான்மையினருக்குச் சார்பாக வைத்திருப்பதனாலும் ஊனமுற்றோருக்கு இயலாமையை ஏற்படுத்திக்கொண்டு அல்லது அதனைப் பேணிக்கொண்டு அவர்களை இயலாதவர்கள் என்று முத்திரை குத்தும் சமூகத்தின் பங்கு குறித்துக் கவனம் செலுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.kugathasan உலக மாற்றுவலுவுடையோர் நாள் -தா.குகதாசன்(உயிரிழை பயனாளி மட்டக்களப்பு)

இந்த நோக்கு, மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பதோடு தொடர்புடையது.மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்..

இலங்கையில் இந்த மாற்றாற்ரல் உடைய ஒவ்வருவதும் கடுமையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பது வேதனையையும் விரக்தியையும் விளைவித்துள்ளது.

தா.குகதாசன் 

தமிழினத்தில் இந்த பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்கு அரசியல் பிரதிநிதிகள் முற்படுவது அரிதாகவே உள்ளது.

நாம் நமது புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் எமது உறவுகளை நம்பியே வாழவேண்டிய நிலை திட்டமிடப்பட்ட விதமாக விடப்பட்டுள்ளது.

இலங்கையில் மாற்று வலுவுடையோரின் நிலை போராட்டமாகவே அமைகிறது. காலத்துக்கு காலம் பெயர்கள் மாற்றப்பட்டாலும் தனிமனிதர் சுதந்திரம் இன்னும் கேள்வியாகவே தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் ஊனமுற்றோர்.அங்கவினமுற்றோர், வலுவிழந்தோர்,மாற்றுவலுவுடையோர், என பெயர்கள் வகுக்கப்பட்டாலும் தற்போது மாற்று திறனாளிகள் என பெருமையுடைய சொற்பதத்தில் அழைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கான வசதிகள் அனைத்தும் மறுக்கப்படும் போது உதாசீனப்படுத்தப்படும்போதும் மற்றுத்திறனாளிகளின் வாழ்வும் வினாக்குறியாகவே காணமுடிகிறது..

கடந்த காலம் ஏற்பட்ட யுத்தம் பலவகையான மனிதர்களின் வாழ்வை சூறையாடி இன்று தமிழ் பிரதேசங்களில் அடிப்படை வசதிகள் அற்று வாழும் நபர்களின் வாழ்வானது போராட்டங்களாகவும் மரண நிகழ்வாகவும் நாளுக்கு நாள் நிகழ்வதனை அனைவரும் அறிவீர் ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டம், சகமனிதர் சமத்துவம்,தொழில் வாய்ப்பு போன்றவைகள் சட்டவடிவில் மாத்திரம் உள்ளதே தவிர அவர்களின் நடமுறை வாழ்வில் வரவில்லை என்பதே நிதர்சணமான உண்மை…

உலக வரலாறுகளில் பல மாற்றுத்திறனாளிகள் சாதித்தவை சாதனைகளாக பொதிக்கப்பட்டபோதிலும் இலங்கை மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடிப்படை அபிலாசைகளை கூட இன்றும் அடைய முடியாமல் இருப்பது மாற்று வலுவுடையோர்களில் எந்த அளவு ஊக்கம் கொடுக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

மாற்றாற்றல் உள்ள ஓவ்வொரு நபர்களும் சுயமாக இயங்கும் போது அவர்களுக்கான சுதந்திரம் மலரும். தொழில் பேட்டைகள், போக்குவரத்து வசதிகள் அனுகும் முறமைகள், அனுகும் வசதியுடைய பொது இடங்கள் என அடிப்படை தேவைகள் நிபர்த்தி செய்து கொடுக்கப்படுமாயின் சாதித்த சக உறவுகள் வரிசையில் ஏனையவர்களும் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதே உண்மை…

வருடா வருடம் வரவு செலவு கணக்கறிக்கைகள் கையாளுகிறார்கள். அதில் சுகதாரம், கல்வி, பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக செலவு செய்யப்படும் நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களும் முன்வந்து மாகாணத்திற்கு ஒரு மாற்றாற்றல் உடையவர்களுக்கான தொழில் வழங்கும் வதிவிடங்கள் அமைக்கபடுமாயின் அதன் ஊடாக அவர்களது வாழ்வு சுபீட்சமாகும்.

இதனையே இந்த நாட்டின் குடிமக்களுக்கும் உலக மக்களுக்கும் மாற்றுவலுவுடையவரின் சார்பில் கூற விரும்புகிறேன்.

ஆகவே மலர இருக்கும் புது ஆண்டில் கூட இவர்களது வாழ்வை நோக்கி நகருமாயின் மற்றுத்திறனாளிகளும் புதுமை செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.!