உலகின் கப்பல் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் தொடரும் தாக்குதல்கள் – வேல்ஸ் இருந்து அருஸ்

இஸ்ரேலின் மற்றுமொரு கப்பலை கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்த எடுத்த முயற்சி அமெரிக்கா கடற்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் போல் அல்லாது இந்த தடவை கடற்கொள்ளையர்கள் போல சிறிய படகுகளில் சென்று கப்பலை கைப்பற்ற ஏமன் படையினர் முயன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஏமன் கடற்கரையை அண்டிய ஏடன் வளைகுடாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அந்த பகுதியில் கடல் கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் Arleigh Burke-class destroyer USS Mason என்ற கப்பல் இந்த தாக்குதலை முறியடித்து கப்பலை மீட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

லைபீரியாவின் கொடியுடன் பயணித்த சென்றல் பார்க் என்ற பொஸ்போரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற கப்பலே கடத்தப்பட்டது. இந்த கப்பல் சோடியக் மரி ரைம் எனப்படும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் இஸ்ரேலிய கோடீஸ்வரரான ஏயல் ஒபேர்ஸிற்கு சொந்தமானது. கப்பலை காப்பாற்றியதற்காக அவர் அமெரிக்க கூட்டணிப் படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கப்பலில் பல்கேரியா, இந்தியா, ஜோர்ஜியா, பிலிப்பைன்ஸ், ரஸ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த 22 பேர் பணியாற்றியுள்ளனர்.

Central Park vessel222 உலகின் கப்பல் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் தொடரும் தாக்குதல்கள் - வேல்ஸ் இருந்து அருஸ்இந்த நடவடிக்கையை தொடர்ந்து கப்பலில் இருந்த 5 கடத்தல்காரர்கள் சிறிய அதிவிரைவு படகில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அவர்களை அமெரிக்காவின் கடற்படைக்கப்பலில் இருந்த உலங்குவானூர்திகளை பயன்படுத்தி மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து சரணடைய வைத்து கைது செய்துள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தாக்குதலை முறியடிப்பதற்கு ஏமன் படையினர் இரண்டு நடுத்தர பலஸ்ரிக் ஏவுகணைகளை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களை நோக்கி திங்கள் காலை ஏவியதாகவும், ஆனால் அவை கப்பலில் இருந்து 18 கி.மீ தொலைவில் வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கப்பல்கள் சேதமடையவில்லை. எனினும் இந்த இரு ஏவுகணைகளையும் அமெரிக்க கப்பல் சுட்டுவீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையில் யப்பானின் நாசகாரிக் கப்பலும் அமெரிக்க கப்பல்களுக்கு உதவியை வழங்கியுள்ளன. எனினும் கடத்தல்காரர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. யாரும் இந்த தாக்குதலுக்கு உரிமைகோரவில்லை.

அந்த பகுதி ஏமனின் கட்டுப்பாட்டு பகுதி, சோமாலிய கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் இந்த பகுதியில் இல்லை.  எனவே ஏமனே அதற்கு பொறுப்பாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Gulf of Aden உலகின் கப்பல் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் தொடரும் தாக்குதல்கள் - வேல்ஸ் இருந்து அருஸ்கடந்த வாரம் இஸ்ரேலின் கலக்ஸி லீடர் என்ற கப்பலை ஏமன் படையினர் கைப்பற்றியதை தொடர்ந்து அவர்களே இந்த கப்பலையும் கடத்த முற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அந்த கப்பல் தற்போது ஏமனின் துறைமுகமான கொடியாடா பகுதியில் நிற்கின்றது.

கொடியாடா துறைமுகத்திற்கு சென்றல் பார்க் கப்பலை நகர்த்துமாறு கடத்தல்காரர்கள் மிரட்டி அதனை கொண்டு செல்ல முற்பட்டதாகவும், கப்பலின் தொடர்பாடல்கள் அமெரிக்க கடற்படையினரால் ஒட்டுக்கேட்கப்பட்டதால் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மற்றும் பிரித்தானியா படையினரும், அம்ரே எனப்படும் தனியார் புலனாய்வு அமைப்பும் இந்த நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டுள்ளன.

ஏடன் கடற்கரயை அண்டிய பகுதியில் கப்பலினுள் 8 பேர் கலவந்தமாக ஏறியதை தாம் அவதானித்தாகவும், அதில் இருவர் இராணுவச் சீருடையில் இருந்ததாகவும் அதற்கு அருகில் சென்ற கப்பலில் இருந்து அனுப்பப்ட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் படைத்துறையை சேர்ந்த கடல் வர்த்தக நடவடிக்கை அமைப்பு (யூகேஎம்ரிஓ) என்ற அமைப்பு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கப்பல்களை கலக்சி லீடர் கப்பலின் கடத்தலுக்கு பின்னர் தீவிரமா கண்காணித்து வருகின்றது.

அந்த புலானாய்வு நிறுவனம் 1000 இற்கு மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டுள்ளது. கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்லும் பாதுகாப்பு அதிகாரிகளை கப்பல்களுக்கு வளங்கும் பணியையும் செய்து வருகின்றது.

அதுவே கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) வெள்ளை மற்றும் கருப்பு நிற இரண்டு சிறிய படகுகளில் இராணுவ சீருடை தரித்த 8 பேர் கொண்ட அணி சென்றல் பார்க் கப்பலை நோக்கி செல்வதை அவதானித்து தகவல்களை கப்பலுக்கு வழங்கியுள்ளது.

அதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் செல்வந்தருக்கு சொந்தமான மற்றுமொரு சி.எம்.ஏ சி.ஜி.எம் சைமி என்ற கப்பல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆளில்லாத தாக்குதல் விமானம் மூலம் தாக்கப்பட்டு சேதமடைந்திருந்தது. ஈரானின் விமானம் தாக்கியதாக கூறப்பட்டது. ஆனால் ஈரான் அதனை மறுத்துள்ளது.

கப்பல் தீப்பற்றி எரிந்தபோதும், அது பின்னர் காப்பாற்றப்பட்டது. பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

container ship linked to Israel உலகின் கப்பல் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் தொடரும் தாக்குதல்கள் - வேல்ஸ் இருந்து அருஸ்இரு வாரங்களுக்குள் தாக்கப்பட்ட 3 ஆவது கப்பல் இது. இஸ்ரேலிய செல்வந்தர்களுக்கு சொந்தமான கப்பல்களே அவை.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற நிழல் போரில் சோடியக் மரிரைம் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் ழுன்னரும் தாக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு இஸ்ரேலின் எண்ணைத்தாங்கி கப்பலான மேர்செர் steet என்ற கப்பல் மீது ஓமான் கடல் பகுதியில் இடம்பெற்ற ஆளில்லாத விமானம் மூலமான தாக்குதலாலில் இரு பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

தற்போது கப்பல்கள் செங்கடல் மற்றும் மத்தியதரை கடல் வழியாக பயணிக்கும்போது தமது அடையாளர்களை கண்காணிக்கும் ஜி.பி.எஸ் சமிக்சைகளை நிறுத்திவிட்டே (Automatic Identification System trackers) தற்போது பயணிக்கின்றன. இதன் மூலம் அடையாளம் கண்டு தாக்குவதில் இருந்து தப்பமுடியும் என அவர்கள் நினைக்கின்றனர். என MarineTraffic.com இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சென்ரல் பார்க் கப்பல் இறுதியாக சுயஸ் கால்வாயினூடாக பயணித்து செங்கடல் பகுதியினுள் நுளையும்போது தனது அடையாளம் காணும் சமிக்கைகளை நான்கு நாட்களுக்கு முன் நிறுத்தியிருந்தது.

எனினும் கப்பலை சரியாக அடையாளம் கண்டு கடத்தல்காரர்கள் அதிவேக விரைவுப்படகில் சென்று கப்பலை கைப்பற்றியுள்ளனர். அப்படியென்றால் கப்பல்களை தமது செய்மதி மற்றும் உளவு விமானங்கள் மூலம் மிகப்பெரும் நாடுகள் கண்காணித்து தகவல்களை வழங்குகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்துவதுபோலவே பாராசீக வளைகுடாவினுள் நுளைந்த அமெரிக்காவின் எய்சன்கவர் USS Eisenhower என்ற விமானந்தாங்கி கப்பலை ஈரான் எவ்வாறு தொடர்ந்து துல்லியமாக கண்காணித்து வந்தது என்ற காணொளி வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

அதேசமயம் திங்கட்கிழமையும் ஒரு சிறிய படகில் 3 பேர் மற்றுமொரு கப்பலை நோக்கி சென்றதாகவும், அதனை கண்காணித்து தாம் தகவலை அனுப்பியதும் அவர்கள் தமது திட்டத்தை கைவிட்டு சென்றுவிட்டதாகவும் யூகேஎம்ரிஓ தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதைய நிலை உலகின் கப்பல்போக்குவரத்தை கடுமையாக பாதிப்பதுடன், பல்முனைவாக்கம் பெற்ற உலக ஒழுங்கு பலமடைவதற்கும் வழிவகுக்கும் என்பதே யதார்த்தம்.