ஈரான் – அமெரிக்காவிடையே போர் ஏற்படுமாயின் ஈரான் மொத்தமாக அழிந்து விடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தகவலை ட்ரம்ட் தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதை எதிர்த்து ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் “இது போன்ற மிரட்டல்களை விடுத்து ஈரானை ஒன்றும் செய்ய முடியாது“ என்று பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் வளைகுடாப் பகுதியில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியது.
கடந்த ஞாயிறு அன்று செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ட், ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடமாட்டாம் என்றும், அந்நாட்டுடன் எந்த சண்டையையும் விரும்பவில்லை என்றும் போர் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே பதற்றங்களை தணிக்கும் விதமாக, அமெரிக்காவுடன் போர் நடத்தும் எண்ணம் தமக்கும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ட் இன் ருவிட்டர் இற்கு பதிலளித்த சாரிஃப், “அலெக்ஸான்டர், செங்கிஸ்கான் போன்ற மற்ற படையெடுப்பாளர்கள் செய்ய முடியாததை ட்ரம்ப்ட் செய்ய முடியுமென நினைக்கிறார்“ என்று குறிப்பிட்டுள்ளார்.