இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் தமது புனித விடுதலைப்பயணத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வு

  • பிரான்சில் ஆரோவில் ஆர்டிங்குலோ மாதா ஆலய மலைப்பகுதியில் தமிழர் அன்புறவுக் கூடுகை மூலம் ஈழமக்கள் புனித விடுதலை யாத்திரை ஆரம்பம்
  • இனஅழிப்பால் பாதிக்கப்பட்ட இளைய ஈழத்தமிழர்கள் தம் வாழ்வையே சாட்சியாக்கி
  • உலக மக்களை ஈழதேச விடுதலைக்குதவ அழைத்த நெஞ்சுருகும் நிகழ்வு
  • புங்கேற்பாளரான மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்-

உலக ஈழத்தமிழர் வரலாற்றில் ஈழத்தமிழர்கள்  லூர்த்து அன்னையின் திருக்காட்சித் திருத்தலத்துக்கு  அண்மையிலுள்ள மேகங்கள் கொஞ்சும் பிரான்சின் அசுபின் ஆரே (Aspin Aure)  என்னும் குன்றில் அன்புறவு கூடுகையாக12 13. 08. 2023 இல்  ஈழத்தமிழர்கள் வேறுபாடுகளைக் கடந்தவர்களாக இணைந்தமை விடுதலையின் காலம் நெருங்குவதை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்த அன்புறவுக் கூடுகையில் வரலாற்றில் இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தின் முக்கிய தலைவராகிய மோசேசுக்கு சீனாய் மலைமேல் முட்செடிகளின் ம்த்தியில் தோன்றிய பேரொளியாக  இறைவன் பத்துக்கட்டளைகளை இஸ்ரேலிய விடுதலைப் பயணத்திற்கான பாதைவரைபாக அருளி இறைவன் தனக்கும்  விடுதலைப்போராளிகளுக்கும் இடையிலான உரையாடலைத் தொடங்கியமை நினைவு கூரப்பட்டது.

முதல் நான்கு கட்டளைகளாலும் ஒரே தலைமை, பலகூறுகளாகப் பிரிவுபடாமை, வெற்றுப்பேச்சின்மை, பரக்க பரக்க வாழாது வரவரக் கண்டு வாழ வாரத்தில் ஏழாவது நாளில் அமைதியாக கடவுளை முன்னிறுத்தி உழைப்புhளர்களுக்கான ஓய்வினை உறுதி செய்து புதிய வாரத்தை எதிர்கொள்வதற்கான ஆ;ன்மீகப் பலத்தை பெறுதல் எனபன குறித்து பேசப்பட்டு, என்னுள் நானாகவே ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் உள்ள கடவுள் விடுதலை நோக்கிப் பயணிக்க பகலில் மேகமாகவும் இரவில் நெருப்புத் தூணாகவும் தானே தோன்றாத்துணையாக தெய்வமாக விளங்குவான் என்ற இஸ்ரேலிய நம்பிக்கை  மீள்வாசிப்புச் செய்யப்பட்டது.

கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்ற உள்ள உறுதியுடன் விடுதலை நோக்கிய பயணம் தொடரப்பட வேண்டும் என்ற அடிப்படை உண்மை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. அவ்வாறே பத்துக் கட்டளைகளின் அடுத்த ஆறு கட்டளைகளும் விடுதலைக்காகப் போராடும் மக்கள் எதை எதைச் செய்து எதை எதைச் செய்யாது தம்மை ஒரே தேசஇனமாகக் கட்டமைக்க வேண்டும் என்பது எவ்வாறு விளக்கப்பட்டதென்பது மீள்வாசிப்புச் செய்யப்ப்ட்டது.

இன்று ஈழத்தமிழர்களின் விடுதலைப்பயணத்தின் இடைநிலையில் இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசாஙகத்துடனும் வெளிநாட்டு அரசாங்கங்களுடனும் தாம் கெஞ்சியும் கொஞ்சியும் பெறும் அடிமை வாழ்வை ஈழத்தமிழ் மக்களுக்கான மகிழ்ச்சிக்கான பாதைவரைபாக காட்டி மக்களை மயக்கி நிற்பது போலவே மோசேயின் காலத்திலும்; ஏன் தங்களை உணவும் நீரும் இல்லாத பாலைவன வாழ்வுக்கு விடுதலைப் பயணத்தில் அழைத்து வந்தார் என 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டு இருந்தும்  விடுதலையின் அருமையறியாத இஸ்ரேலியர்கள; தங்கள்  விடுதலைத் தலைவனான மோசேயைத் திட்டித் தீர்த்தனர்.

இந்த நேரத்தில் மோசேசை   ‘நானே இருப்பவன் என்னும் பொருள்தரும்’  யாவே (கடவுள்) சீனாய் மலை உச்சிக்கு அழைத்து அங்கு முட்புதர்ச் செடிகளுக்கு நடுவே நெருப்பாகக் காட்சியருளிப் பத்துக்கட்டளைகளை இஸ்ரேலிய விடுதலைப் பயணத்திற்கான பாதைவபை;ரபாக வழங்கி, போராடும் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலைத் தொடக்கனார். இதுவே இஸ்ரேலிய விடுமலைப் போராட்டத்துக்கான இறை- மனித உறவுப்பாலமாகி இறைவன் தன்னையே விடுதலை தரும் ரோற்றலாக முன்னிறுத்தி மேசே விடுதலைப்பயணத்தைத் தொடர உதவினானர் என்பது இஸ்ரேலிய நம்பிக்கை.

இந்த இஸ்ரேலிய வரலாற்று நம்பிக்கை நிகழ்வை ஈழத்தமிழர் தம் அன்புறவுக் கூடுகைக்கான முதல் நிகழ்வாக ஒளிஒலிக் காட்சியாக மீட்டுருவாக்கம் செய்து தங்;கள் 2023ம் ஆண்டுக்கான புனித விடுதலை யாத்திரையை அருட்தந்தை கிலறி வெல்லம் அவர்கள் தலைமையில் தொடங்கிய ஈழவரலாற்று நிகழ்வு பிரான்சு ஸ்பெயின் எல்லபை;பகுதியான் ஆரோ மலைப்பகுதியில் 12.08.2023 அன்று; இடம்பெற்றது.

ஈழத்தமிழ் மக்களின் இவ்வரலாற்று நிகழ்வில் அப்புகுதி மேயர் மட்டுமல்ல 94 வயதான பிரான்சிய மூதாட்டியும் மற்றும் வேட்டி சால்லை அணிந்த மூத்த பிரான்சியப் பெரியார்களும் மனிதநேயம் மிகு பிரான்சிய இளைஞர்களும், தமிழர் பண்பாட்டில் தங்களுக்கு உள்ள மதிப்பை வெளிப்படுத்த சேலை வேட்டியணிந்து கலந்து சிறப்பித்தனர்.

பிரான்சியர்களும்  ஈழத்தமிழர்களுடன் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது  கலந்து சிறப்பித்தமை “ஙாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழின் விருதுவாக்கியத்தையும் “ன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் திருமந்திர வரிகளையும் கம்பனின் “குவலயம் தனியன்று பொதுகாண்” என்ற உலக மயமாக்க அறிவிப்பையும் எதார்த்தக் காட்சிகளாகக் கண்முன் நிறுத்தின.

அருட்தந்தை கிலறி வெல்லம் அவர்கள் தலைமையில் ஆரம்பமான இறைவழிபாட்டு நிகழ்வில் முட்செடிப் புதர் நடுவே மோசசுக்கு இறைவன் நெருப்பாகத் தோன்றி பத்துக்கட்டளை அருளிய வரலாறும் 40 நாட்கள் மோசசு மலையில் இருந்த நிலையில் இஸ்ரேலிய மக்கள் நம்பிக்கை இழந்து பொன்பசுக்கன்றுக் குட்டியைச் செய்து வழிபட்டு நன்றியற்றவர்களாக தங்கள் உள்ள உறுதியற்றதன்மையுள்ளவர்களாக இருப்பதைக் கண்டு கோபம் கொண்ட மோசசு பத்துக்கட்டளைகள் பொறித்த கற்பலகையை உடைத்து எறிந்ததையும் பின்னர் மீளவும் யாவோயிடம் சென்று இரண்டாவது முறையாகப் பத்துக்கட்டளைகளைப் பெற்ற பொழுது அந்த முதல் பலகையை முட்புதர்ச் செடி நெருபப்pல் எரித்ததையும் நினைவு கூர்ந்த ஈழமக்கள்.

சாம்பலை நெற்றியில் பூசி இனிமேல் தாங்களும் விடுதலையின் உறுதிப்பாட்டின் மேல் நம்பிக்கை இழக்காது இணைந்து ஒரே ஈழதேச மக்களாக விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம் என உறுதிமொழியெடுத்தனர்.

இந்த நிகழ்வுகளுக்கான பிரான்சிய விளக்கங்களை அருட்தந்தை கிலறி வெல்லம் அவர்களும் இதற்கான சுருக்கமான தமிழ்க்குறிப்புக்களை அவரின் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியர் தமிழறிஞர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்களும் கூடவே தமிழ் இளைம் பெண்கள் தங்கள் பார்வைகளையும் முன்வைத்தனர். ஏற்புiராயாக 94 வயது பிரான்சிய அம்மா மட்டுமல்ல பல மூத்த பிரான்சியப் பெரியார்களும் இளையவர்களும் இணைந்து உரையாற்றினர்.

புனித விடுதலைப் பயணத்த்தின் தொடக்கத்தையும் அது பெரும் பயணமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கும் பாதுகாப்பான அமைதி வாழ்வை அளிக்கும் இறைசத்தி மூலமாக விளங்கும் என்பதைச் சுட்டும் காலத்தடன் நிலைக்கும் நினைவுச் சின்னமாக “அமைதியின் மரம்” ஒன்றை அருட்தந்தை கிலறி வெல்லத்தின் அழைப்பில் மூத்த ஆசிரியரும் ஊடகவியலாளரும் ஆய்வாளருமாகிய சூ.யோ. பற்றிமாகரன் நட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் உலகமெங்குமுள்ள ஈழத்தமிழர்கள் இந்த அன்புறவுக்கூடுகையில் இணைந்து புனித விடுதலை யாத்திரையில் இறைதுணையைத் தங்கள் பலமாகப் பெற்று ஈழமக்களதும் உலகினதும் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கு உழைக்கும் இறைபணியைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மலைக்குன்று மேலான அன்புறவுக் கூடுகையினதும் புனித விடுதலை யாத்திரையினதும் தொடக்க  நிகழ்வுகள் நிறைவு பெற்றன. பத்துக்கட்டளைகள் தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் இந்தப் பலிப்பீடத் தூண்களில் வரலாறு உள்ள மட்டும் தமிழிலும் பிரெஞ்சிலும் பத்துக்கட்டளைகள்; நிலைபேறாக நிற்கும் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமாகவும் உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அடக்கப்பட்ட மக்களுடன் துணைநின்று போராடும் வாழும் இறைவனாகக் கடவுள் உள்ளார் என்ற உண்மை இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தின் பின்னணியில் ஈழமக்களுக்கான நம்பிக்கைச் செய்தியாக அறிவிக்கப்பட்டது. அஞ்சாதீர் கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்ற மரியன்னையின் வாழ்வியல் செய்தி ஈழமக்களுக்கான உள்ள உறுதியாக மீள்வாசிப்புச் செய்யப்பட்டது. தொடர்ந்து மதிய உணவு அன்புறவு கூடுகையாக இடம்பெற்றது.

disappeared family 11 இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் தமது புனித விடுதலைப்பயணத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வுஅதனையடுத்து ஜினோசு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லூடன்வில்லா ஏரிக்ரைக்குச் சென்று ஆர்டிங்குலோ மரியன்னையின் திருவுருவினை தமிழீழத்தேச வரைபுவளைவுக்குள் எழுந்தரளச் செய்து இனஅழிப்பால் பாதிப்புற்றுத் தண்டனை நீதியை இனஅழிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கும்படியும் பரிகாரநீதியை இனஅழிப்பாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டதாலும் பாதிப்புற்று வாழ்விழந்து வாழ்வுக்காகத் துடிக்கும் பாதிப்புற்றவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குமாறும் இறைவனுக்கு வேண்டுதல் செய்யும் புனித விடுதலை யாத்திரை ஆரம்பமாவதை ஈழமக்கள் தங்களின் பாரம்பரிய தொன்மை இசைக்லையான பறையினைப் பிரான்சின் பறையிசைப் பெருங்கலைஞர்கள் குழு இசைப்பேராசான் பரா அவர்களின் தலைமையில் முழங்க உலகினுக்கு அறிவித்து பறையிசை முழக்கத்துடன் புனித விடுதலை யாத்திரையைத் தொடங்கினர்.

முதல்நாளையப் புனித விடுதலை யாத்திரையின் முடிவில் ஏரிக்குள் அன்னை மரியாளின் திருவுருவை நிறுத்தி கரையில் தமிழர்களின் பண்பாட்டுக்கலைநிகழ்வுகள்  எல்லா மக்களும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழும் மக்கள் கலைநிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டன. திருமண வாழ்வில் நாற்பது ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்த இணையர்களுக்கு மாலைமரியாதை செய்து கூட்டு வாழ்வு குடும்பத்தில் தலைவனதும் தலைவியதும் தன்னாட்சி பகிர்வாக அனுபவமாகும் பொழுதெ நாட்டிலும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமக்கான இறைமை வாழ்வை மக்கள் உறுதிபப்டுத்தவர் என்ற உண்மை எடுத்து விளக்கப்பட்டது.

பின்னர் ஈழத்தமிழ் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி திருவருளைக் குறிக்கும் நீரின் தொடர்பை தமிழர் மரபில் புனித தீர்த்தமாடலாகக் கருதி தங்களை நீரை அடையாளமாக் கொண்ட திருவருளால் புனிதப்படுத்தி மனதுக்கண் மாசில்லாதவராக விடுதலைக்கு உண்மையும் நேர்மையுமான முறையில் ஒற்றுமையாக உழைப்போம் என இறைவனை முன்னிறுத்தி உறுதிமொழி எடுத்தனர். முதல்நாள் நிகழ்ச்சிகளின் முடிவு நிகழ்வாக வாகனங்களில் ஆர்டிங்குலோ மரியன்னையின் திருக்கோயில் உள்ள மலைக்குச் சென்று ஆர்டிங்குலோ மரியன்னையாகப் பல அற்புதங்கள் செய்து வரும்  6 அடி உயிர மரத்தில் செதுக்கப்பட்ட மரியன்னையின் திருவுருவின் முன்பாக ஈழமக்கள் ஒற்றுமையாக புனித விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க இறையருள் வேண்டி நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் பங்கேற்றனர்.

ஈழமக்களின் ஒன்றுபட்ட தேச விடுதலைப்பயணத்தை இறைவனின் துணையுடன் ஈழமக்கள் முன்னெடுக்க தாயக மக்களும் உலக ஈழத்தமிழர்களும் தேசமாக எழுந்து புனித விடுதலை யாத்திரையில் தமது அறிவால் அறியாமையையும் பொருள்வளத்தால் வறுமையையும் ஈழமக்களிடை இருந்து நீக்க உழைக்க கல்லான  இதயத்தை எடுத்து கனிவான இதயத்தை ஒவ்வொரு ஈழத்தமிழர்க்கும் இறைவன் கொடுக்க வேண்டுமென்று வேண்டுதல் செய்யப்பட்டது.  அன்றைய இரவுணவு அன்புறவுக் கூடுகையாக அமைந்தது.

War Crimes in Sri Lanka இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் தமது புனித விடுதலைப்பயணத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வுமறுநாள் காலை உணவும் அன்புறவுக் கூடுகையாகவே அமைய மலையடிவாரத்தில் உள்ள ஆரோ உதைபந்தாட்ட அரங்குக்கு அருகில் திறந்த வெளியில் தமிழீழ வளைவுள் ஆர்டிங்குலோ மரியன்னையின் திருவுருவம் எழுந்தருளச் செய்யப்பட்டு திருப்பலி தமிழிலும் பிரெஞ்சிலும் நிறைவேற்றப்பட்டு புனித விடுதலை யாத்திரையை இறைவன் துணைநின்று முன்னெடுக்க வேண்டுதல் செய்யப்பட்டது.

புதிதாகத் திருமுழுக்குப் பெற விரும்பிய பிரான்சியர் சிலரை முன்னிலைப்படுத்தி அவர்கள் திருமுழுக்கால் புதிய இறை வாழ்வுக்குப் புறப்பமுவது போல  ஈழமக்கள் புனித விடுதலைப் பயணத்திற்கான இறையருளை அவரவர் சமய நிலையில் பெற்று விடுதலையை மீளநிறுவம் பலத்துடன் எழுகிறார்கள் என்ற உண்மை விளக்கப்பட்டு இறைதுணையுடையதாகத் தொடரும்  புனித விடுதலைப் பயணம் ஈழ மக்களுக்கான விடுதலைக்கான இறையாசிப் பொழிவுகளைக் கொண்டதாக இஸ்ரேயல் மக்களின் விடுதலைப்பயணத்தில் இறைவனின் பங்களிப்புப் போல் அமையும் என்கிற நம்பிக்கை  பலப்படுத்தப்பட்டது.

பின்னர் தமிழீழத் தேசவரைபட வளைவுக்குள் ஆர்டிங்குலோ மரியன்னையின் திருவுருவை எழுந்தருளச் செய்த பீடத்தைச் சுமந்தவர்களாகத் தமிழ் இளையோர்கள் தமிழரின் தொன்மை மிகு கலைவடிவான பறையிசையினைப் பிரான்சின் பெருங்கலைஞர்கள் முழங்க புனித விடுதலை யாத்திரையை எரிக்கரையின் தெற்கில் இருந்து வடக்காக முதல்நாள் புனித விடுதலை யாத்திரை முடிவுற்ற இடம் நோக்கி ஆரம்பித்தனர்.

முற்றிலும் இளையவர் நிகழ்வாக அமைந்த இந்தப் புனித விடுதலை யாத்திiரையில் 1956 முதல் 1983 வரை சிறிலங்கா அரசபயங்கரவாதத்தையும் இனஅழிப்பையும் அரச கொள்கையாக வளர்த்தெடுத்த வரலாற்றுப் பதிவுகளும் மக்களின் வாழ்வியல் மறுக்கப்பட்ட வரலாறும், 1983இன் பின் இன்று வரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையான இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு மூலம் ஈழத்தமிழர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக் கூடிய அச்சம் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஈழத்தமிழர்கள் உள்ளக வெளியக இடப்பெயர்வுகள் அடைந்து உலகின் துன்புறு மனித சமுதாயமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களின் தாய்மண்ணாம் ஈழழண்ணிலும் அரசியல் புகலிட வாழ்வில் உலகின் முக்கிய நகரங்களிலும்  வாழும் இன்றைய சமகால வரலாற்றைக் காரண காரியத் தொடர்புகளுடன் விளக்கும் கி யூ ஆர் கோர்ட் உடன் கூடிய பிரெஞ்சு மொழித் துண்டு பிரசுரங்களை பிரெஞ்சு மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கினர்.

புனித விடுதலை யாத்திரையின் இரண்டாம் நாள் முடிவில் ஆற்றில் மரியன்னையின் திருவுருவை எழுந்தருளச் செய்து அன்னையின் முன் சிறிலங்காவின் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழத்தேச மக்கள் 146000 பேரை கிட்லரை விட மிகமோசமான இனப்படுகொலைகள் மூலம் இல்லாதொழித்த 21ம் நூற்றாண்டின் உலகின் மிகக் கொரூரமான இனப்படுகொலை என்று உலக வரலாறு பதிவுசெய்துள்ள இனஅழிப்பில் பாதிப்புற்ற ஈழத்தமிழ் இளையோர்கள் தாங்களே அந்த இனப்படுகொலைக்கான நேரடிச் சாட்சியங்கள் என்ற வகையில் உலக மக்களுக்குப் பிரான்சின் லூடன்விலேயின் ஏரிக்கரையில் நின்று இசை இயல் நாடக நிகழ்வுகள் மூலம் தமிழிலும்  பிரெஞ்சு மொழியிலும் தங்கள் வலிசுமந்த வாழ்வியல் நிகழ்வுகளை எடுத்துரைத்து உண்மையை உறுதிப்படுத்தி அனைத்துலக சட்டங்களை நடைமுறைப்படுத்தி  தண்டனை  நீதியை இனஅழிப்பைச் செய்தவர்களுக்கு வழங்குமாறும் இனஅழிப்பாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டதாலும் பாதிப்புற்ற குடும்பங்களுக்குப் பரிகார நீதியை நடைமுறைப்படுத்துமாறும் எடுத்துரைத்து.

1586875007 easter 2 இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் தமது புனித விடுதலைப்பயணத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வுஇதனை உரிய முறையில் அணுகுவது உலகநாடுகளதும் உலக அமைப்புக்களதும் கடமை என்பதை வலியுறுத்தினர். நெஞ்சுருகும் உண்மை நிகழ்வுகளைப் மையப் பொருளாகக் கொண்ட அத்தனை படைப்புக்களும் உண்மையின் குரலாக நீதியின் தரிசளமாக அமைந்து உலக மக்களின் நெஞ்சங்களை உருக்கியது. இளையவர்களைப் பாராட்டாத நாக்களேயில்லை எனலாம்.

இளையவர்களின் கண்களிலும் சொல்லிலும் தெரிந்த உறுதி அவர்கள் உள்ளங்கள் நீதிகடைக்கும் வரை உறுதியுடன் போராடும் வேகங்கொண்டெழுந்துளளமையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக்காட்டின. “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்னும் வரலாற்று உறுதி தரும் தேசவிடுதலைப் பாடலுடன் ஈழத்தமிழ் மக்களின் புனித விடுதலை யாத்திரை நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு லூர்த்து அனை;னையின் மாலை நேர மெழுகுவர்த்திப் பவனியில் கலந்து கொள்ளவதற்காக அனைவரும் லூர்த்து அன்னையின் திருத்தலம் நோக்கி வாகனங்களில் புறப்பட்டனர்.

பிரான்சில் மீளவும் ஈழமக்களின் விடுதலைப் பயணம் பயங்கரவாதமல்ல பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளர்சிசகளுக்குமான இறைமையுடன் கூடிய தங்களின் தன்னாட்சி உரிமையை மீள நிறுவும் புனித யாத்திரை என்ற அடிப்படை உண்மை உலகுக்குத் தெளிவாக்பப்ட்டதுடன் இந்தப் புனித விடுதலைப் பயணத்தில் அனைத்து உலக மக்களையும் ஈழத்தமிழர்களுக்கான அவர்களின் மனிதாயக் கடமையைச் செய்து அவர்களின் நாடுகளையும் அமைப்புக்களையும் ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை ஏற்று சிறிலங்காவின் இனவழிப்பில் இருந்து அவர்களைப் பாதுகாக்குமாறு பணிவன்பாக வேண்டப்பட்டது.