இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

பல மாதங்களாக இஸ்ரேலின் நகரங்களின் மாதிரிகளை வடிவமைத்து காசா பகுதியில் பயிற்சிகளை எடுத்துவந்த அல் குசாம் பிரிகேட் மற்றும் அல் குவாட் பிரிகேட்டுக்களை சேர்ந்த 1000 ஹமாஸ் படையினரில்; 300 சிறப்பு பயிற்சி பெற்ற படையினர் மோட்டர்களில் இயங்கும் கிளைடர் விமானங்கள், சிறிய நீர் படகுகள், நீரடி நீச்சல் பிரிவு, உந்துருளி படையணி மற்றும் கனரக புல்டோசர்களை நகர்த்திச் செல்லும் படையணி என பல தரப்பட்ட படையணிகள் இல்ரேலின் முன்னரங்க நிலைகளை உடைத்துக் கொண்டு உள்நுளைந்தனர்.hamass leader2 இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்உலகில் மிக அதிக பாதுகாப்பு மிக்க பிரதேசமான காசாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான பகுதிகள் உள்ளன. செய்மதிகள் தொடர்ச்சிய கண்காணிக்க, பல பாதுகாப்பு நிலைககளில் கமெராக்கள் கண்காணிக்க, உணர்திறன் மிக்க கருவிகள் அபாய எச்சரிக்கை எழுப்ப காத்திருக்க, இரவை பகலாக்கும் மின்குழிள்கள் ஒளிர, எந்த நேரமும் தயார் நிலையில் கோட் – எம்-4 கார்பைன் ரக துப்பாக்கிகள், எம்-136 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கவச வாகனங்களுடன் இஸ்ரேலின் சிறப்பு படையினர் காத்திருக்க அந்த பிரதேசம் ஒரு யுத்தசூனிய பிரதேசம் போலவே எப்பவும் காட்சிகளிக்கும்.

காசா பகுதியில் உள்ள படையணி தான் இஸ்ரேலின் மிகச்சிறந்த தாக்குதல் படையணி என முன்னாள் இஸ்ரேலிய இராணுவத்தின் காசா பிரிவு தளபதி அமிர் அவிவ் பைனாஸியல் ரைம்ஸ் இற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நிலைகளுக்கும் காசா பிரதேசத்திற்கும் இடையில் மனிதர்கள் நடமாட முடியாத பிரதேசமும் உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் கடந்து 300 பேர் கொண்ட கொமோண்டோ படையணி நகர்ந்துள்ளது. அதற்கு ஆதரவாக 700 பேர் கொண்ட படையணி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

istrael attack இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்முதலில் ஏறத்தாள 5000 குறுந்தூர ஏவுகணைகளை ஏவிய ஹமாஸ் படையினர் அந்த புகை அடங்கும் முன்னர் தமது நகர்வை முடித்துவிட்டனர், இஸ்ரேலின் அயன் டோம் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை ஹமாசின் புதிய ஏவுணை தொழில்நுட்பம் முறியடித்துவிட்டது. அதனை அவர்கள் இரண்டு வழிகளில் செய்துள்ளனர்.

ஓன்று உக்ரைன் படையினர் ரஸ்யா போர் விமானங்களுக்கு எதிராக பயன்படுத்திய போரியல் உத்தி. அதாவது ரஸ்யாவின் எஸ்யூ-24 ரக விமானங்களை நோக்கி 10 இற்கு மேற்பட்ட ஸ்ரிங்கர்ரக ஏவுகணைகளை ஒரே தடவையில் ஏவுவதன் ஊடாக விமானத்தின் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களின் எதிர்த்தாக்குதலில் இருந்து தப்பும் ஒரு ஏவுகணை விமானத்தை தாக்கலாம் என்ற உத்தி.

ஹமாசும் அதனை தான் பயன்படுத்தினர், 5000 ஏவுகணைகளை ஏவும்போது இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களுக்கு ஒரேதடவையில் பெருந்தொகை ஏவுகணைகளை எதிர்கொள்ளும் சக்தி இருக்கவில்லை. அதாவது போதுமான ஏவுகணைகள் இல்லை.

தற்போது இஸ்ரேல் அமெரிக்காவிடம் மேலதிக ஏவுகணைகளை கேட்டுள்ளதும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

istrael attack4 இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இரண்டாவதாக அவர்கள் இந்த தடவை பயன்படுத்திய ஏவுகணைகள் முன்னைய ஏவுகணைகளை விட தரமுயர்த்தப்பட்டவை அதாவது இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை ஊடுருவும் தன்மை வாய்தவை என மத்திய கிழக்கு ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார்.

அதேசமயம், ஜாமர்கள் எனப்படும் சாதனங்களை பயன்படுத்தி இஸ்ரேலின் தொலைதொடர்பு சாதனங்களையும் அவர்கள் செயலிழக்க செய்துவிட்டனர். தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை இஸ்ரேல் உணர்வதற்கு முன்னரே இஸ்ரேலின் 20 நகரங்களுக்குள் சண்டை மூண்டுவிட்டது. செரேட் பகுதியில் உள்ள காவல்நிலையத்தை கைப்பற்றிய ஹமாஸ் படையினர் 20 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் சுட்டுக்கொன்றதுடன், பலரை கைது செய்திருந்தனர்.

அதேசமயம் அருகில் இருந்த நகேல் ஒஸ் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் தளத்தினை அதிரடியாக கைப்பற்றியிருந்தனர். தளத்தின் நாஹால் இலகுகாலாட் படை பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் ஜேனாதன் ஸ்ரின்பேர் மற்றும் மேஜர் தர பிரதி கட்டளை அதிகாரி உட்பட 76 இற்கு மேற்பட்ட படையினர் அந்த தளத்தில் கொல்லப்பட்டிருந்தனர். செலிம் பயிற்சித் தளத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் றோமன் கொப்மானும் இந்த தாக்குதலில் காயமடைந்திருந்தார்.

இதனிடையே, அருகில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 260 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அது மட்டுமல்லாது 20 நகரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவரை கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1300 பேர் கொல்லப்பட்டதுடன், 3500 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஏறத்தாள 600 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களில் 15 இற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதில் பிரித்தானியை சேர்ந்த 15 பேர் அமெரிக்காவை சேர்ந்த 25 பேரும் அடங்கும்.

இந்த மோதல்களில் ஹமாஸ் அமைப்பு 120 பேரையும், இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பு 30 பேரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்க்கப்படுகின்றது. ஆனால் இதுவரையில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கைகளை வெளியிட இந்த அமைப்புக்கள் மறுத்துள்ளன.

இந்த நிலமையை எதிர்பார்க்காத இஸ்ரேல் பதில் தாக்குதலை எங்கிருந்து ஆரம்பிப்பது, எங்கு நடத்துவது என்று நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர் இஸ்ரேலிய படையினரும் மக்களும் வரலாறுகாணாத இழப்புக்களை சந்தித்துவிட்டனர். 48 மணிநேரமாக 7 இற்கு மேற்பட்ட இடங்களில் சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்றிருந்தன.

ஹமாஸ் படையினரின் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் இஸ்ரேலின் நவீன போர் டாங்கியை குண்டு வீசி தகர்த்ததும். பெருமளவான டாங்கிகள் மற்றும் கவசவாகனங்களை கைப்பற்றிய ஹமாஸ் படையினர் அவற்றில் சிலவற்றை எடுத்துச் சென்றதுடன், பலவற்றை குண்டுவைத்து தகர்த்திருந்தனர்.

50 வருடங்களின் பின்னர் இஸ்ரேல் சந்தித்த மிகப்பெரும் இழப்பு இது. படைத்துறை ரீதியான இழப்புக்களை விட, இஸ்ரேலின் படைத்துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விம்பம் உலகில் உடைக்கப்பட்டுள்ளது. மொசாட் என்ற புலனாய்வுக் கட்டைப்பின் முற்றான தோல்வியே இந்த தாக்குதல். 2001 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறை சந்தித்த தோல்வி போன்றதே இது.

Gasa 2 இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இஸ்ரேலின் மிகச்சிறந்த படையணிகள் நேரடி மோதல்களில் தோல்வியை சந்தித்தும் உலக அரங்கில் மிகப்பெரும் சேதத்தை மேற்குலகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹமாஸ் படையினரின் பயிற்சிகள், தாக்குதல் உத்தி மற்றும் தாக்குதலை ஒருங்கிணைத்த விதம் என்பன பல படைத்துறை ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஸ்யாவின் படையினரையும் அதன் ஆயுதங்களையும் உலக அரங்கில் தரம்குறைவாக காண்பிப்பதற்கு உக்கிரைனை வைத்து மேற்குலகம் மேற்கொண்ட நடவடிக்கையை இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் பூமராங் மாதிரி திருப்பிவிட்டுள்ளது.

இஸ்ரேல் பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. 300,000 படையிரை திரட்டி தரை தாக்குதலுக்கு தயராகி வருகின்றது. 365 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள 3 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட காசா மீது பல நூறுதடவை வான் தாக்குதல்களை எப்-16 விமானங்கள் மேற்கொண்டுள்ளன. 1600 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 6000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும்முள்ளனர்.

கடந்த 16 வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்ட அந்த மக்கள் ஏற்கனவே 5 பெரும் போர்களின் வலிகளை தாங்கியவர்கள். தற்போதும் அவர்கள் மிகப்பெரும் அவலத்தை எதிர்நோக்கி நிற்கின்றனர்.