இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை (2) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை வரும் அவர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா உட்பட பல தென்னிலங்கை அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளார். கண்டியில் உள்ள பௌத்த ஆலயமான தலதா மாளிகை, திருமலை எண்ணைக்குதங்கள் போன்றவற்றை பார்வையிடும் அவர் வடக்கு சென்று இந்தியாவினால் அமைக்கப்பட்ட கலாச்சார நிலையம் மற்றும் யாழ் நூலகம் ஆகியவற்றிற்கும் செல்லவுள்ளார்.
இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களின் 200 ஆவது ஆண்டு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.