இலங்கை மாணவர்களுக்கு பெருமளவு புலமைப்பரிசில்களை வழங்கிய சீனா

சீனாவில் உள்ள 30 தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்காக 40 இற்கு மேற்பட்ட இலங்கை மாணவர்களுக்கு சீனா அரசு புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீனா தூதரகம் அறிவித்துள்ளது.

காலாநிதி படிப்புக்கான 7 புலமைப்பரிசில்கள், முதுமானிப்படிப்புக்கான 24 புலமைப்பரிசில்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான 9 புலமைப்பரிசில்களை சீனா அரசு வழங்கியுள்ளது. அதனை வழங்கும் விழா கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.

1975 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில்களை வழங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை மாணவர்கள் உயர் படிப்புக்காக சீனா செல்லும் அதேசமயம், சீன மாணவர்கள் உயர் படிப்புக்கான இலங்கை வருவதாகவும் இந்த நிகழ்வில் பேசிய சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.