இலங்கை பயங்கவாத சட்டம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 13 மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிககையில் குறைபாடுகள் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இலங்கை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

26 வயதான அஹ்னாஃப் ஜஸீம் ஒரு கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் கடந்த 2020ம் ஆண்டு மே 16ம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

WhatsApp Image 2021 05 16 at 2.58.21 PM இலங்கை பயங்கவாத சட்டம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

அவர் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தில் “ தீவிரவாதம்” குறித்த சிந்தனைகளும் கருத்துக்களும்  இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ,அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.