இலங்கையின் நீண்டகால உள்ளூர் நாணய வழங்கலுக்கான தரத்தை பிற்ஸ் என்ற அனைத்தலக நிதி தரப்படுத்தும் நிறுவனம் தரமிறக்கியுள்ளது. சி தரத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட வீழ்ச்சி என்ற ஆர்.டி நிலைக்கு அது இலங்கையின் நாணயத்தை தரமிறக்கியுள்ளது.
உள்ளூர் கடன் மாற்றுத்திறனும் சி என்ற நிலையில் இருந்து டி என்ற கீழ் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. நீண்டகால வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ஆர்.டி ஆகவும், வெளிநாட்டு நாயண முறிகள் டி என்ற நிலைக்கும் தரமிறக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசுக்கும் அனைத்துலக நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் இந்த வாரம் அனைத்துலக நாணயநிதியம் தனது முதலாவது ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் பிற்ஸ் அமைப்பின் தரமிறக்கல் அறிவித்தல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.