இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளீர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா நிகழ்வு பெருமளவு மக்கள் பங்களிப்புடன் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் கேக் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது.

கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணி தலைவர் பா.சிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ. சேனாதிராஜா கலந்துகொண்டார்.

1 3 இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

கௌரவ விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரனும், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கமும்,சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன்,சாந்தி சிறிஸ்கந்தராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர், க.ரவிகரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.
DSC02971 இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

DSC02990 இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

DSC02992 இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

DSC02996 இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

முன்னதாக கட்சியின் கொடியினை தலைவர் மாவை சேனாதிராசா ஏற்றிவைக்க, மதகுருமார்களின் ஆசியுரையினை தொடர்ந்து. நிகழ்வுகள் ஆரம்பமாகியது.