இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம் மீனவர்கள் திருகோணமலை கோட்பே பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவர்களின் சுகாதாரம் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு கடற்படையினர் இடமளிக்கவில்லை எனவும் தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது இந்திய மீனவர்கள் விடயத்தில் சுகாதார திணைக்களம் மற்றும் மீன்பிடி திணைக்களம் இணைந்து நோய் தொற்று தொடர்பாக ஆராய்ந்து வருவதுடன், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் திருகோணமலை மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.