இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தல்

இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

இதன் போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேவியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அவர், இலங்கையை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.