இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொரோனா – நேற்று 9 பேர் மரணம், 1891 பேருக்கு தொற்று

இலங்கைக்குள் மேலும் 9 பேர் நேற்றைய தினம் கொரோனாவினால் மரணமாகினர். இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் நேற்று மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் உட்பட 1891 கொரோனாத் தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பின், மஹரகம – அரவ்வல வடக்கு இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிலியந்தலையின் 10 கிராமசேவையாளர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டன.