இலங்கையை அச்சம் கொள்ளவைக்கும் டெங்கு (Dengue) நோய்-அருண்மொழி

டெங்கு நோயானது தென்னாசியா,கரிபியன் நாடுகள,தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் பரவக்கூடிய நோயாகும்.அண்மைக் காலமாக டெங்கு இலங்கையை ஆட்டிப் படைத்து வரும் நோயாக மாறி வருகிறது. இலங்கையில் டெங்கு சடுதியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. 200000 நோய்த் தொற்றுள்ளோர் ஜுலை மாதம் 2019 வரை பதிவாகினர். 2019 ஓகஸ்ட் மட்டும் 9459 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் 2019 இந்த நோய் காவுகொண்ட உயிர்கள் செப்டெம்பர் மாதத்திலேயெ 75 ஐ தாண்டிவிட்டது. இது வருட சராசரி இறப்பு எண்ணிக்கையை (52) விட அரை மடங்கு அதிகமாகும். மலேரியா நோய்க்குப் பிறகு இலங்கையில் கூடிய கவனத்தையும் கவலையையும் ஏற்படுத்தும் ஆண்டுதோறும் வழமையாக தொடரும் (endemic) நோயாக டெங்கு இடம் பிடித்துவிட்டது. இது கொழும்பு காலி கம்பகா இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் உச்சமாக காணப்படுகிறது.

நோயின் அடிப்படைகள்

டெங்கு வைரஸ் DENV1 – 4 என நான்கு வகை கிருமிகள் இந்த நோயை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்களை நோயாளியிடம் இருந்து காவும் நுளம்புகள் ஈடிஸ் வகை ((Aedes aegypti / Ae. Albopictus) பெண் நுளம்புகள் ஆகும். மழை காலங்களின் பின் தெளிவான மழை நீரை கொள்ளும் டயர்கள்,பீலிகள் மற்றும் அனைத்து பாத்திரங்களிலும் இந்த நோய்காவி நுளம்பு பெருகும். இரண்டு மூன்று வாரங்களில் இந்த நுளம்புகள் முட்டையிலிருந்து நிறைவுடலியாக வல்லவை. இவை விடிகாலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும் மனிதனைக் கடிக்கின்றன. இதன்போது நோய்த் தொற்றுள்ளவரில் இருந்து சுகதேகிக்கு கிருமிகள் பரப்ப்படுகிறது.

நோயின் குணம் குறிகள்

டெங்கு நோய் சாதாரண வைரஸ் காய்ச்சல் போல தோன்றும். காய்க்சல, தலைவலி,தோல் புள்ளிகள் (Rash) இதன் மூன்று கூட்டு குறிகளாகும். இரண்டாவது முறை ஏற்படும் டெங்கு தொற்று உயிராபத்தான டெங்கு நோயை (Dengue Hemorrhagic Fever (DHF)) உண்டாக்க வல்லது. DHF காய்ச்சலுடன் தோலின் கீழ் குருதிக்கசிவு,முரசு,மூக்கு இரத்தக்கசிவு காணப்படுகின்ற நிலை இந்த நோயின் ஆபத்தான நிலையாகும்.DengueSymptoms இலங்கையை அச்சம் கொள்ளவைக்கும் டெங்கு (Dengue) நோய்-அருண்மொழி

உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி இரண்டாவது தடைவ தெற்று வரும்போது ஏற்படும் நிர்ப்பீடன தாக்கங்களால் குருதிச் சிறுதட்டு (Platelets),பைபிறினோஜன் (Fibrinogen) அளவுகள் குறைவதோடு சம்பந்தமான குருதி உறைதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனுடன் குருதி மயிர்க்குழாய் அனுமதி திறன் அதிகரிப்பால் குருதிப்பாயம் (plasma) கசிவும் ஏற்படுவதால் ஈரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மரணமடையும் நிலை உருவாகிறது. இதற்கான முழு உண்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

நோய்த் தடுப்பு முறைகள்

நேதய்காவிக் கட்டுப்பாடே முதன்மையான தடுப்பு முறையாகும். நுளம்புச் செறிவு நோய்க்கிருமிச் செறிவு என்பன கட்டுப்படுத்தப்பட்டால் இந்த நோய்ப் பரவலைத் தடுதடதுவிடலாம். வைரஸ் கிருமிக்கு மருந்துகள் இல்லை. எனவே வருமுன் காத்தலினாலேயே இதனைத் தடுக்க முடியும். நகரப்பகுதிகளின் சுற்றுப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழீழ நடைமுறை அரசின் சுகாதாரப் பிரிவு இதனை இலகுவாக கட்டுப்படுத்தியது. அதன் அடிப்படை விதிகளாக மழைப் பொழிவுகள் முடிவுற்று ஒரு வாரம் முடிவுறும் போது பூச்சியியல் ஆய்வுப் பிரிவு நோயாளர் உள்வரும் முக்கிய இடங்களில் சோதனைகளை நடாத்தி நோய்காவிப் பெருக்கமுள்ள இடங்களை அறிவிக்க மக்களோடு மக்களாக சுகாதாரப் பிரிவு சிரமதானம் விழிப்புணர்வு போன்றவற்றை மிகவும் நேர்த்தியாக நடைமுறைப் படுத்தியது. இதனை பெருநிலப்பரப்பில் தனது வலிமையனைத்தையும் கொண்டு தடுத்து நிறுத்தியது.

இதற்கு சான்றாக வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் பகுதிகளில் இதே நுளம்புகளால் பரப்பப்படும் சிக்குண்குணியா இலட்சக்கணக்கில் நோயாளர்களைப் படுக்கையில் வீழ்த்திய வேளையில் வன்னிக்குள் தொண்டு நிறுவனங்களால் நம்ப முடியாதபடி ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. மலேரியாவைக் கூட வன்னிப்பகுதியே முதன்முதலாக முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மனிதவள முகாமைத்துவம் தலைமைத்துவம் இங்கு இருந்த அளவுக்கு இலங்கையின் தலைநகர பகுதிகளில் ஒருபோதும் இருந்ததில்லை. இதன் விளைவே இன்றைய நிலையை உருவாக்கியுள்ளது.