இலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று

435 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 741 பேருக்கும் சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேருக்கும் தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 51 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  8 ஆயிரத்து 588 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இதுவரை பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வடைந்துள்ளன.

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  100,826,681 ஆக அதிகரித்துள்ள நிலையில்,  2,167,092 பேர் அத்தாக்கத்தினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply