இலங்கையில் கடந்த 36 மணிநேரத்தில் 11 யானைகள் விபத்துக்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து மோதியதால் 6 யானைகள் ஒரே தடவையில் கொல்லப்பட்டதுடன், ஏனைய யானைகளும் விபத்துக்களில் இறந்துள்ளன. யானைகள் அதிகம் நடமாடும் காடுகளை கடந்து செல்லும் புகையிரதங்கள் 20 மணிக்கு கி.மீ வேகத்தில் செல்லுமானால் இந்த விபத்துக்களை தடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் பயணித்தாலும் யானைகளை பாதுகாக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளர்.