இலங்கையில் நேற்றைய தினம் 443 பேருக்கு கொரோனா தொற்று – மரணம் 24 ஆக உயர்வு

680 Views

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா 3ஆவது அலை பாதிப்பில் நேற்றும் 443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்னதாக 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மேலும் 169 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதா இராணுவத் தளபதி கூறினார்.

இதையடுத்து நேற்று தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 443 ஆக அதிரித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையில் 24 வது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனையின் போது இது உறுதியாகியுள்ளது.

Leave a Reply