இலங்கையில் சீனக் கடற்படையின் புதிய துறைமுக திட்டங்கள்- இந்திய கடற்படையின் துணை தலைவர் எச்சரிக்கை

277 Views

இலங்கையில் சீனக் கடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என  இந்திய கடற்படையின் துணை தலைவர் வைஸ் அட்மிரல் ஜி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீன கடற்படை புதிய துறைமுக திட்டங்களை பெறுவது குறித்த  கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் கடல்சார் எல்லைகளை பாதுகாப்பதற்கு இந்திய கடற்படை சிறந்த முறையில் தயாராகவுள்ளது.  எங்களிற்கு எவரும் எந்த விதத்திலும் ஆச்சியத்தை அளிக்கமுடியாது.

இலங்கையில் சீன கடற்படை துறைமுக திட்டங்களை பெறுவது ஆபத்தானதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய முயன்றீர்கள் என்றால் அது கடினமான விடயம்.  இந்த பிராந்தியத்திற்கு புதியவர் ஒருவர் அதிகளவு ஆர்வத்தை காண்பிக்க தொடங்கினால் அது எங்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.  இந்திய கடற்படை முழு பிராந்தியத்தையும் கண்காணிக்கின்றது.   மும்பாய் நட்சத்திர விடுதி தாக்குதலிற்கு பின்னர் கடல்பாதுகாப்பு தொடர்பில் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  கடற்பகுதியில் நாங்கள் ஆச்சரியமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்றார்.

நன்றி – தினக்குரல்

Leave a Reply