இலங்கையில் கொரோனா தொற்றால் 2,203 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து மொத்த உயிரிழப்பு 2,203 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உயிரிழப்புகள் எந்த காலப்பகுதியில் இடம்பெற்றது என்பது குறித்த அறிவிப்பு இதவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply