இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது

144 Views

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி  1527 பேர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த தகவலை  வெளியிட்டுள்ளது.

இதே வேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 241ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியின் முதலாவது  மருந்து இதுவரை 16 இலட்சத்து 91 ஆயிரத்து 562 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply