392 Views
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது தமிழகத்திற்கு அகதியாக சென்று அகதிகள் முகாமில் தங்கியிருந்த முஜிபூர் ரகுமான், மீண்டும் சட்டவிரோத படகு மூலம் இலங்கைக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு முஜிபூர் ரகுமான், இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையில் இருந்து சட்டவிரோதமாக மீண்டும் தனுஷ்கோடி சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இவரை கைது செய்த உளவுத்துறை அதிகாரிகள் மண்டபம் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.