இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு அதிக உற்பத்தி தரும் கால்நடைகளை வழங்குவதாகவும் இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
விவசாய அமைச்சின் கூற்றுப்படி, கடந்தாண்டு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி 19 சதவீதத்தால் குறைந்துள்ளது.