இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவும் இலங்கையும் தற்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இணைந்து பணியாற்ற, நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவவை வழங்கும் என்றும் வாங் வென்பின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனா உள்ளிட்ட கடன் வழங்குநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.