இலங்கையின் கடன்விவகாரங்கள் தொடர்பில் இந்திய ஜப்பான் பிரதமர்கள் பேச்சு

165 Views

இந்திய பிரதமர் ஜப்பான் பிரதமருடன் இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜப்பான் பிரதமர்பியுமோ கிசிடாவுடன் திங்கட்கிழமை இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு  இருவரும் இணங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜப்பான் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply