இலங்கையின் அரசி கையிருப்பு ஜனவரி மாதம் வரைக்குமே

இலங்கையில் ஏற்பட்ட வறட்சி மற்றும் கடும் மழை காரணமாக 62,141 ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்துள்ளதால் அங்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு, சப்பிரகமுவ, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள நெல் கையிருப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டுமே போதுமானது என்பதால் எதிர்வரும் அறுவடை முக்கியமானது. அது அழிவடைந்தால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என அது மேலும் தெரிவித்துள்ளது.