இலங்கையருக்கு சுவிஸ் ‘விசாமறுப்பு’ உண்மையில்லை- ரவிநாத் ஆரியசிங்க

சுவிஸ் தூதரக பணியாளரின் சர்ச்சையையடுத்து சுவிற்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு வீசா வழங்கப்படுவதில்லையென வெளியாகியிருக்கும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.

சுவிஸ் தூதரகம் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வீசா வழங்குவதாகவும் அவர் உறுதி செய்தார். சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தாரை சிகிச்சைக்காக ஆகாய அம்பியுலன்ஸ் மூலம் சுவிற்சர்லாந்துக்கு அனுப்பி வைக்குமாறு சுவிஸ் அரசாங்கம் இலங்கையை கோரியுள்ளது.

அதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் தற்போது சுவிஸ் தூதரகம் இலங்கையர்களுக்கு சுவிற்சர்லாந்து செல்வதற்காக வீசா வழங்குவதில்லையென செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.